ரூ.1¼ கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி

தியாகதுருகம் அரசு பள்ளியில் ரூ.1¼ கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி
ரூ.1¼ கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி
Published on

தியாகதுருகம்

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு ரூ.1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி தலைமை தாங்கி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நகர செயலாளர் மலையரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் சமது, செயலாளர்கள் புருஷோத்தமன், ஷனாவாஸ், அரசு ஒப்பந்ததாரர் அன்பு ராஜா, நிர்வாகிகள் செந்தில், கோமதுரை, நேசமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com