ரூ.1¾ கோடியில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ரூ.1¾ கோடியில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.
ரூ.1¾ கோடியில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி
Published on

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 30, 34-வது வார்டுகளில் உள்ள தெருக்களில் சிமெண்டு சாலை அமைக்க நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ.1 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சைதாப்பேட்டை கானாறு தெருவில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com