பாம்பன் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணிகள் 84% நிறைவு- ரெயில்வே துறை

நிரப்புதல் பணிகள் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
பாம்பன் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணிகள் 84% நிறைவு- ரெயில்வே துறை
Published on

பாம்பன்,

ராமேஸ்வரம் தீவு பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 105 ஆண்டுகள் பழமையான ரெயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததை அடுத்து, புதிய ரெயில் பாலம் அமைக்க, ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 11.8.2019 அன்று பூமி பூஜையுடன் பால கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது 84% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 333 அடித்தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான 101 இடைவெளிகளை நிரப்புதல் பணிகள் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

அனைத்து 99 அணுகு பால கண்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கார்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அதி வேகத்தில் ரெயில்களை இயக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரெயில்வே கடல் பாலமாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com