தனுஷ்கோடி அரிச்சல் முனை வளைவை சுற்றி தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்

அரிச்சல் முனை சாலை வளைவை சுற்றி கூடுதலாக பாறாங்கற்களை கொண்டு தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தனுஷ்கோடி அரிச்சல் முனை வளைவை சுற்றி தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தனுஷ்கோடி சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறங்களிலும் பாறாங்கற்களால் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டுள்ளன.

தனுஷ்கோடி கம்பிப்பாடுக்கும், அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் காரணமாக பல இடங்களில் பாறாங்கற்களினால் ஆன தடுப்பு சுவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

இதனால் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தின் போது கடல் நீரானது தடுப்பு சுவரை தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. மேலும் அரிச்சல் முனை சாலை வளைவை சுற்றிலும் பாறாங்கற்கள் தொடர்ந்து சரிந்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு வருகின்றன.

தடுப்பு சுவர்கள்

இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலை வளைவை சுற்றிலும் கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டப்பட்டு தடுப்பு சுவர்கள் கட்டும்பணி தேசிய நெடுஞ்சா லைத்துறை மூலம் தீவிரமாக நடந்து வருகிறது. அரிச்சல் முனை சாலை வளைவில் மற்றும் கடற்கரை பகுதியில் லாரிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ள கற்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தடுப்பு சுவராக அடுக்கி வைக்கப்பட்டு அந்த கற்கள் சரிந்து கீழே விழாமல் இருக்கும் வகையில் இரும்பு கம்பிகளை கொண்டு வேலிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒரு வர் கூறும்போது, தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தின் போது கடல் நீர் சாலை வரை வந்து செல்வதை தடுக்கும் வகையில் 1,100 மீட்டர் தூரத்திற்கு ரூ.9 கோடியே 50 லட்சத்தில் கூடுதலாக பாறாங்கற்களினால் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இதுதவிர ராமநாதபுரத்திலிருந்து ராமே சுவரம் தனுஷ்கோடி இடைப்பட்ட பகுதியில் உள்ள சேத மடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் நடந்துள்ளது என்றார்.

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

இதற்கிடையே தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் அங்கு பணிகள் நடப்பது தெரிந்தும், சுவர் அமைத்து வரும் பாறாங்கற்கள் மீது ஆபத்தான முறையில் ஏறி நின்று செல்பி எடுத்து வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் விதமாக பணிகள் முடிவடையும் வரை தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலை வளைவு வரை சுற்றுலா வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com