மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி: கிண்டியில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்

கிண்டியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக 2 நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளது.
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி: கிண்டியில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பரங்கிமலை போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் ஓட்டல் ஹப்லிஸ் அருகே உள்செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை நடைபெறுகிறது. அப்போது அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி ஜி.எஸ்.டி சாலையில் விமான நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வீ.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.

பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதும் இன்றி வழக்கமான சாலையில் கத்திப்பாரா வழியாக செல்லலாம். வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலை சிப்பெட் சந்திப்பில் இடது புறம் திரும்பி திரு.வீ.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com