கோவையில் மாணவியிடம் ஆபாச பேச்சு: கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கோவையில் கோடை விடுமுறையில் வீட்டின் அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது பள்ளி மாணவியிடம், நபர் ஒருவர் ஆபாசமாகப் பேசியுள்ளார்.
போக்சோவில் கைது
Published on

கோவை,

கோவையில் கோடை விடுமுறையில் வீட்டின் அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது பள்ளி மாணவியிடம், நபர் ஒருவர் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து அழுதபடி வீட்டிற்குச் சென்ற மாணவி, பெற்றோரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போக்சோவில் கைது:

விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர், கோவை-திருச்சி ரோட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜான்பீட்டர் (வயது 53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com