ராஜாக்கமங்கலம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே கட்டிட தெழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையை சேர்ந்தவர் ஞானபால், கொத்தனார். இவருக்கு ஒரு மகளும், சதீஷ் (வயது18) என்ற மகனும் உண்டு. சதீஷ் 12-ம் வகுப்பு படித்து விட்டு தற்போது, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும், அவர் வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர், மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை.  இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு காணவில்லை. இதையடுத்து வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அப்போது, அங்குள்ள ஒரு மரத்தில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஞானபால் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com