கட்டிட தொழிலாளி பலி

பாளையங்கோட்டையில் கட்டிட தொழிலாளி விபத்தில் இறந்தார்.
கட்டிட தொழிலாளி பலி
Published on

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை அருகே உள்ள தெற்கூர் கீழநத்தம் ஆர்.சி.பள்ளி தெருவை சேர்ந்தவர் ஜோசப் பால்சாமி. இவருடைய மகன் செல்வநாயகம் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் தனது நண்பரான பாளையங்கோட்டை மேலூர் கீழநத்தம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். மதுரை- கன்னியாகுமரி நான்குவழி சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த கார், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற செல்வநாயகம் உயிர் இழந்தார். சுடலைமுத்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com