கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான வாரிய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5 ஆயிரத்தை ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்க வேண்டும். புதுப்பித்தல் ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் விண்ணப்பிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்க செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஜான் பாஸ்கர், சங்கர், ஜெயபால், சங்கரநாராயணன், முருகேசன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட செயலாளர் முருகன், மாநில குழு மோகன், செண்பகம், நெல்லை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் நல சங்க பொருளாளர் முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com