‘சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்’ - திருமாவளவன்

சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
‘சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்’ - திருமாவளவன்
Published on

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

“சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அண்மையில் முதல்-அமைச்சர் விஜய்யை நான் சந்தித்தபோது அவரும் இந்த கருத்தை வெளிப்படுத்தினார். சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் அதுதான் விருப்பம். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அந்த பொறுப்புணர்வோடு சட்டமன்றத்தில் இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com