கருத்துக்கேட்பு கூட்டம்

புளியங்குடி மார்க்கெட் கட்டிடம் கட்டுவது குறித்து கலெக்டர் ஆகாஷ் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது
கருத்துக்கேட்பு கூட்டம்
Published on

புளியங்குடி:

புளியங்குடியில் புதிதாக மார்க்கெட் கட்டிடம் பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்ககு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார், நகரசபை தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் அந்தோணிசாமி வரவேற்றார். இதில் மார்க்கெட் வியாபாரிகள், நகர வர்த்தக சங்கத்தினர், கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பழைய இடத்திலயே கடைகள் கட்டப்பட்ட வேண்டும். மார்க்கெட் இல்லாததால் இந்த பகுதியில் பணப்புழக்கம் இல்லை. நகரின் மைய பகுதியில் இருப்பதால் அனைத்து பகுதி மக்களும், வெளியூர் மக்களும் வந்து செல்ல ஏற்ற இடம் என்று பல்வேறு காரணங்களை அனைவரும் எடுத்துக்கூறினர்.

பின்னர் இறுதியாக பேசிய கலெக்டர், உங்கள் அனைவரின் கோரிக்கைகளும் அரசுக்கு எடுத்து சொல்லப்படும். அனைவரின் விருப்படியே பழைய இடத்தில் கடைகள் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, மேலாளர் செந்தில், மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வைகுண்ட ராஜா உட்பட பலவேறு கட்சி நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீரோடைகளை மறித்து கட்டப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகளை அகற்ற ஆகாஷ் உத்தரவு பிறப்பித்தார். நேற்று மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்வீழ்ச்சியில் அகற்றும் பணியானது சிவகிரி மற்றும் செங்கோட்டை தாசில்தார்கள் முன்னிலையில் தொடங்கியது. கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com