புதிய தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்

வந்தவாசியில் புதிய தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதிய தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்
Published on

வந்தவாசி

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ரங்கநாதர் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

தாசில்தார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் 2 கோவில்களின் புதிய தேர்களின் வெள்ளோட்டம் விடுவது என்றும், தேர் திருவிழாவை சுமூகமான முறையில் நடத்துவதும், குறித்த நேரத்தில் அமைதியாக நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக், மண்டல துணை தாசில்தார் ஆனந்தகுமார், மின்சாரத்துறை உதவி பொறியாளர் பஞ்சமூர்த்தி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பா.ஜ.க. நகர தலைவர் சுரேஷ், மாநிலக் குழு உறுப்பினர் துரை நாடார், மாவட்ட செயலாளர் குருலிங்கம் மற்றும் தேர் நிர்வாக குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com