பக்கிங்காம் கால்வாயை புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிங்காம் கால்வாயை புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
பக்கிங்காம் கால்வாயை புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
Published on

சென்னை தலைமை செயலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அடையாறு - கூவம் ஆறுகளை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புனரமைத்தல் மற்றும் சுற்றுப்பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தீவுத்திடலின் பின்பு இருந்து மயிலாப்பூர் வரையிலான அடையாறு-கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயை புனரமைப்பு செய்து, அகலப்படுத்தி, கரையோரப் பகுதிகளில் உள்ள சுற்றுப்பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை நதிகள் சீரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சுவர்ணா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த் ராவ், சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தவல்லி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com