மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கையில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

சிவகங்கை

சிவகங்கை கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிவகங்கையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் குருசாமி தலைமையில் நடக்கிறது.

எனவே சிவகங்கை கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின் வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com