மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் குறித்து விசாரணை நடத்த நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டிக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்னர் ஆதார் எண்ணை மின்இணைப்பு எண்ணுடன் இணைப்பது குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். நேற்று காலை நிலவரப்பட்டி நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 314 மின் இணைப்பு எண்களுடன் 1 லட்சத்து 63 ஆயிரத்து 474 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இது 77.34 சதவீதம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com