மணலி புதுநகரில் மின்சாரம் தாக்கி கன்டெய்னர் லாரி டிரைவர் பலி

மணலி புதுநகரில் மின்சாரம் தாக்கி கன்டெய்னர் லாரி டிரைவர் பலியானார்.
மணலி புதுநகரில் மின்சாரம் தாக்கி கன்டெய்னர் லாரி டிரைவர் பலி
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கலைஞர் நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் தேவராஜ் (வயது 61). கன்டெய்னர் லாரி டிரைவரான இவர், மணலி புதுநகர் வெள்ளாங்குளம் பகுதியில் உள்ள தனியார் கன்டெய்னர் யார்டில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தேவராஜ், தனது டிரைலர் லாரியை ஓட்ட சென்றார். அப்போது கீழே தண்ணீரில் கிடந்த ஒயர் மீது கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் தேவராஜ் உறவினர்கள், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை வாங்க மறுத்துவிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com