தொடர் விடுமுறை எதிரொலி; பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த கூட்டம் - ஏமாற்றத்துடன் சென்ற சுற்றுலா பயணிகள்

படகு சவாரிக்கான டோக்கன் பெறுவதற்காக அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்கினர்.
தொடர் விடுமுறை எதிரொலி; பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த கூட்டம் - ஏமாற்றத்துடன் சென்ற சுற்றுலா பயணிகள்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் மூலம் சவாரி செய்து அங்குள்ள சதுப்பு நிலக் காடுகளின் அழகை ரசித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறைகள் விடப்பட்டுள்ளதோடு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால் பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அங்கு படகு சவாரிக்காக வரும் சுற்றுலா பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் படகு சவாரிக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். அந்த வகையில் இன்று அதிகாலை முதலே டோக்கன் பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்கினர்.

இதனிடையே டோக்கன்கள் வழங்கப்பட்டு படகு சவாரிக்காக சுற்றுலா பயணிகள் காத்திருந்த நிலையில், மேலும் அதிக அளவில் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. இதையடுத்து டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாகவும், மேற்கொண்டு யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com