திமுக கூட்டணியிலேயே தொடருங்கள்: இடதுசாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
திமுக கூட்டணியிலேயே தொடருங்கள்: இடதுசாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. சென்னை சேப் பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதய நிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். திமுக சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவறுத்தியதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com