தொடர் மழை.. குற்றாலம் மெயின் அருவியில் 4வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் 4-ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை.. குற்றாலம் மெயின் அருவியில் 4வது நாளாக குளிக்க தடை
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு நாட்களுக்கு முன்பு அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து இருந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் மெயின் அருவியில் 4-வது நாளாக இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. சபரிமலையில் நடை அடைக்கப்பட்டதால் அய்யப்ப பக்தர்கள் யாரும் குற்றாலத்திற்கு வரவில்லை. குறைவான சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com