

மயிலாடுதுறை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்மழையால் பள்ளிகளுக்கு 2வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மயிலாடுதுறையில் இன்று 2வது நாளாக அனைத்து பள்ளிகளுக்கும் கலெக்டர் விடுமுறை அறிவித்து உள்ளார்.
மயிலாடுதுறையில் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார், திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கனமழையால் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து இன்றும் மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த 26 கிராம மீனவர்கள் கடலுக்கு இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.