தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 1.37 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

இதன்மூலமாக 1,37,500 பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

'கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல தினசரி இயக்கக்கூடிய 2200 பேருந்துகளுடன் கூடுதலாக 550 பேருந்துகள் என மொத்தம் 2,750 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டுள்ளன.

இதன்மூலமாக 1,37,500 பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேபோல் இன்றும், தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வசதிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் பயணங்களை மேற்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com