தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்


தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை

வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் 1,153 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,245 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர்.

11.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர். ஆக கடந்த 11.04.2025 முதல் இன்று (13.04.2025) அதிகாலை 2 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story