தொடர் மழை: நீலகிரியில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை: நீலகிரியில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை கனமழை பெய்தது. அதற்கு முன்னதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. தொடர் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மண் சரிவும் ஏற்பட்டது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோல் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com