

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 118.05 அடியாக இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நேற்று அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2349 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 356 கன அடியாகவும் இருந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு 19.8, தேக்கடி 15.2, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1, வீரபாண்டி 3.8, சண்முகாநதி அணை 2, போடி 1.8.