தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று பகலில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் (வயது 35) என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் நிவாரணமும் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பணியிடத்தில் பாதுகாப்பு சூழலை அதிகப்படுத்த வேண்டும். பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய வேண்டும். பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தெர்மல் செயலாளர் கணபதி சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மூத்த தோழர் பொன்ராஜ், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகி அப்பாதுரை, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ரவிதாகூர், தெர்மல் சங்க தலைவர் சுடலைமுத்து, துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், தெர்மல் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

1 More update

Next Story