ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

சோழிங்கநல்லூர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
Published on

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் செல்வம் என்பவர் கடந்த 1 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். பொக்லைன் எந்திர டிரைவரான செல்வத்தை நேற்று அந்த பகுதி பெண் அதிகாரி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை மற்றும் நண்பகல் பணிபுரியக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர் மாநகராட்சி 15-வது மண்டலம் அருகே பள்ளிக்கூட சாலையில் உள்ள ஒப்பந்ததாரர் அலுவலகம் வெளியே ஊழியர்கள் குழுமி இருந்த தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியரை தரக்குறைவாக பேசிய பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரியிடம் போலீசார் ஊழியர்களை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com