கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

கனிம வளத் துறையால் வழங்கப்படும் அனுமதி சீட்டை முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மாவட்ட சாலை வழியே கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு இன்று (பிப்ரவரி 20) முதல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

அதன்படி, காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து, கனிம வளத் துறையால் வழங்கப்படும் அனுமதி சீட்டை முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதி வேகமாக மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர் மீதும் அவரை அனுமதிக்கும் உரிமையாளர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி வாகனங்களை கைப்பற்றி தேவைப்பட்டால் சிறை தண்டனை விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com