பயிர் சேதங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பயிர் சேதங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பயிர் சேதங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
Published on

தமிழகத்தில் இந்த மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அப்போது அதிகளவு மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்படும் பயிர் சேதங்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக விவசாயிகள் புகார் அளிப்பதற்கு வசதியாக வேலூர் தொரப்பாடியில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை அரசு வேலை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.

பருவமழையின் காரணமாக ஏற்படும் பயிர் சேதங்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் குறித்து விவசாயிகள் 0416-2267315 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com