15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள்... பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி ஏற்பாடு

பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
Published on: 

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் தலைமையில், 14.10.2026 அன்று நடைபெற்ற அனைத்து மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில், மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ட்ரோன் மூலம் மழைக்கால பாதிப்புகள், மழைநீர் தேங்கும் இடங்கள், கால்வாய்கள், சாலைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

உடனடி நடவடிக்கை

மழைக்காலங்களில் பொதுமக்கள் மழைத் தொடர்பான புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரிவிப்பதற்காக ரிப்பன் கட்டடம் தலைமையிடத்திலும், தெற்கு, மத்தியம் மற்றும் வடக்கு என மூன்று வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் 24/7 மணிநேரமும் செயல்படும் வகையில் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண் மையம், 94450 61913 என்ற வாட்ஸ் ஆப் எண், நம்ம சென்னை செயலி, ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புகார்கள் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதர புகார்கள் குறித்து இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

வ. எண் மண்டலம் கட்டுப்பாட்டு அறை எண்

1. திருவொற்றியூர் 94451 90201

2. மணலி 94451 90202

3. மாதவரம் 94451 90203

4. தண்டையார்பேட்டை 94451 90204 89258 19481

5. இராயபுரம் 94451 90205

6. திரு.வி.க.நகர் 94451 90206

7. அம்பத்தூர் 94451 90207

8. அண்ணாநகர் 94451 90208

9. தேனாம்பேட்டை 94451 90209

10. கோடம்பாக்கம் 94451 90210

11. வளசரவாக்கம் 94451 90211

12. ஆலந்தூர் 94451 90212

13. அடையாறு 94451 90213

14. பெருங்குடி 94451 90214

15. சோழிங்கநல்லூர் 94451 90215

மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com