சர்ச்சை கருத்து விவகாரம் - மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜு

ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்குமேயானால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சர்ச்சை கருத்து விவகாரம் - மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜு
Published on

சென்னை,

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ராணுவ வீரர்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், சர்ச்சை கருத்து விவகாரம் தொடர்பாக செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"இந்திய நாட்டை, கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன். அவர்களின் தியாகத்தை வணங்குபவன். என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள். நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன். ஆனாலும் ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்குமேயானால், அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!"

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com