"என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி" மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
"என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி" மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி
Published on

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'லியோ' படத்தில் திரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.

"மிக கேவலமாகவும் அவமரியாதை செய்யும் வகையிலும் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவரைப் போன்ற ஒருவருடன் சேர்ந்து நடிக்காததில் மகிழ்ச்சி. இனிமேலும் நடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்துக்கு அவப்பெயரை உண்டாக்குகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜும், மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில்,மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.

மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், நடிகர் சங்கம் என்னிடம் எதுவும் விளக்கம் கேட்கவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியதால் நான் அவ்வாறு பேசினேன். நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சிக்கிறது" என மிகவும் ஆவேசமாக பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com