முதல் அமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு ஜாமீன்

'கரூர் சம்பவத்தின் போதே, அவரை போட்டு இருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே' என, அன்பில் மகேஷிடம் திமுக கவுன்சிலர் ஆவேசமாக பேசினார்
தி.மு.க கவுன்சிலர்
தி.மு.க கவுன்சிலர்
Published on: 

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற தாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன், தி.மு.க.வை சேர்ந்த வேலூர் மாநகராட்சி கவுன்சிலரும், அன்பில் மகேஷின் ஆதரவாளருமான டீட்டா சரவணன் என்பவர், முதல்-அமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை ஏற்படும் வகையில் பேசினார்.

4 பிரிவுகளில் வழக்கு

அதாவது, தலைவரே அன்னைக்கே கரூரில்அவரை போட்டு இருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே என அவரிடம் ஆவேசமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சென்னை புழல் போலீசார், டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உடனே அவர் தலைமறைவாகி விட் டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

தி.மு.க. கவுன்சிலர் கைது

இந்நிலையில் டீட்டா சரவணன், தனது நண்பரான விழுப்புரம் தெற்கு அய்ய னார் குள வீதியில் உள்ள மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம் வீட்டில் பதுங்கியிருப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை சென்னையில் இருந்து விழுப்பு ரத்திற்கு விரைந்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், பிரேம் வீட்டில் பதுங்கி யிருந்த டீட்டா சரவணனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக பிரேமையும் போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். கைதான கவுன்சிலர் டீட்டா சரவணனை, மாதவரம் நீதிபதி விடுமுறையில் இருப்பதால் அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை வளாகத்தில் நீதிபதி ஜெய்சங்கர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நீதிபதி அவரை ஜாமீனில் விடுவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com