லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால் சர்ச்சை

லஞ்ச வழக்கில் தொடர்புடைய அதிகாரிக்கு, ராமநாதபுரம் நகராட்சி அலு வலகத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் சிறந்த பணியாளருக்கான நற் சான்றிதழ் வழங்கியது சர்ச்சையானது. பின்னர் அந்த சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது.
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால் சர்ச்சை
Published on

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 3-ந்தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஜிபே கணக்கை ஆய்வு செய்தபோது. கடந்த 3 ஆண்டுகளில் ஜிபே மூலம் ரூ.25 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கு முறையான கணக்கு தெரிவிக்காததால் அவர் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆனநிலையில் நேற்று நடந்த சுதந்திரதின விழாவில் ராமநாதபுரம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

திரும்பப் பெறப்பட்டது

இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், "நகராட்சி ஆய்வாளர் கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தது தெரிய வந்தவுடன் அந்த சான் றிதழ் திரும்ப பெறப்பட்டது” என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com