

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில், பாஜக - விசிக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, ரோஷணை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக நிர்வாகிகள் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சியினர், பாஜகவினரை வெளியே செல்லுமாறு கோஷம் எழுப்பினர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரோஷணை போலீசார், இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.