பட்டமளிப்பு விழா: கவர்னர் அரசியல் விஷமத்தனம் செய்கிறார் கி.வீரமணி அறிக்கை

பட்டமளிப்பு விழா: கவர்னர் அரசியல் விஷமத்தனம் செய்கிறார் கி.வீரமணி அறிக்கை.
பட்டமளிப்பு விழா: கவர்னர் அரசியல் விஷமத்தனம் செய்கிறார் கி.வீரமணி அறிக்கை
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக பட்டமளிப்பு பேரூரைகளை நிகழ்த்த யாரை அழைப்பது என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் ஆட்சிமன்றக் குழுவின் ஏகபோக முறை. அதில் கவர்னர் தலையிட்டு, இன்னாரை தான் அழைக்கவேண்டுமென்று நிபந்தனைகள் விதிக்க கூடாது. பட்டமளிப்பு விழா மரபின்படி, கவர்னருக்கு பட்டம்பதக்கம் வழங்குவதுதான் வேலையே தவிர, தனியே பேரூரையாற்றுவது அவரது வேலையல்ல, தனியாக கூடுதலாக அவரையே பட்டமளிப்பு விழா உரையாற்ற அந்த ஆட்சிமன்றக் குழு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதனையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தமிழக கவர்னர் மாணவர்கள் நலனுக்கு எதிராக, வேலைவாய்ப்புக்குத் தேவைப்படும் பட்டச் சான்றிதழ்களை பெற முடியாதபடி தடுத்துக்கொண்டு அரசியல் விஷமத்தனம் செய்கிறார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்அமைச்சர், சட்டப்படி வழக்குப்போடுவது குறித்து யோசித்து வருவதாகக் கூறியுள்ளார். நாம் அதை வரவேற்கிறோம். தாமதிக்காமல் சட்டப் போராட்டக் களத்தில் களமாட உடனே இறங்கியாக வேண்டும். முந்தைய தீர்ப்புகள் நமக்கு கதவுகளை அகலமாகத் திறந்து விட்டுள்ள நிலையில், வழக்குப் போடுவதை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com