எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 15-ந் தேதி நடக்கிறது
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பகுதியில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது. ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம், அரசு மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகவும், நேரிலும் தெரிவிக்கலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com