குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சமையல் எரிவாயு: பிரதமர் மோடி பேச்சு

வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு இந்தியாவை மேம்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.
குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சமையல் எரிவாயு:  பிரதமர் மோடி பேச்சு
Published on

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: - 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி அனைத்தும் பிரதமர் மந்திரி ஊரக சாலை திட்டப்படி போடப்பட்டுள்ளது. இந்தசாலைகள் ஒவ்வொன்று வெளிப்புற கட்டமைப்பின் வெறும் ஒருபாகம் மட்டும் இல்லை.

இந்த சாலை காரணாக மாணவர்களால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சிரமம் ஏதுவுமின்றி பயணிக்க முடிகிறது. விவசாயிகளால் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கள் விளைபொருட்களை விற்கவோ, இடுபொருட்களை வாங்கவோ முடிகிறது. சுலபமாக வாழும் தன்மையை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு ஆடித்திருவாதிரை விழாவுக்காக கங்கை கொண்ட சோழபுரம் வந்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு இந்தியாவை மேம்படுத்தும்.

பாரத் பெட்ரோலியம் திட்டம் மூலம் ரூ.3,700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயனாக அமையும். இது சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கும் நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு கொண்டு சேர்க்கும். குழாய் வழி எரிவாயு நேரடியாக இல்லங்களுக்கு சென்று சுலபமாக வாழும் தன்மையை மேம்படுத்தும்” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com