குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரம்; போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று கனமழை பெய்தது
நீலகிரி
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று கனமழை பெய்தது. கனமழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதியில் ராட்சத மரம் விழுந்தது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






