கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களில் 6 சவரன் வரை அடமானம் வைத்துப் பெறப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய்யப்படும். அத்துடன் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com