காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம்
Published on

கோவில் நிலங்கள் ஆய்வு

காஞ்சீபுரம் மாநகரில் உள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு வருகின்ற பக்தர்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், ஜவுளி மற்றும் துணிக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு வருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காஞ்சீபுரம் மாநகரில் பெருகி வரும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் 1.75 ஏக்கரிலும், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் 8.27 ஏக்கரிலும், உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் 1.86 ஏக்கரிலும், மேட்டுத் தெருவிலுள்ள நகரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் 6.59 ஏக்கரிலும் மற்றும் சித்தேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான நிலம் 0.61 ஏக்கரிலும் நிரந்தர வாகனம் நிறுத்துமிடம் அமைத்திட சம்பந்தப்பட்ட கோவில் நிலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு கூட்டம்

இதனை தொடர்ந்து ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான வெங்கடகிரிராஜா தோட்டம் 1.75 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்.

காஞ்சீபுரம் மாநகருக்குள் மேலும் சில இடங்களில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக காஞ்சீபுரம் மாநகர வணிகர் சங்கங்கள், ஜவுளி கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் காஞ்சீபுரம் மாநகர பொதுமக்கள் ஆகியோருடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.சங்கீதா, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com