மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் போலீஸ்காரர் பலியான சம்பவம்: 4 பேர் கைது

மதுரை நெல்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் இடித்து விழுந்து போலீஸ்காரர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் போலீஸ்காரர் பலியான சம்பவம்: 4 பேர் கைது
Published on

மதுரை,

மதுரை நெல்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் இடித்து விழுந்துது. இதில், மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் சரவணன் (வயது44) என்பவர் பலியானார். கண்ணன் (48) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் காயம் அடைந்த போலீஸ்காரர் கண்ணன் விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் விசாரணை நடத்தினர். அதில் இடிந்து விழுந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உரிமையாளராக கீழவெளிவீதியை சேர்ந்த முகமதுஇத்ரீஸ்(55) உள்ளார். அவர் கட்டிடத்தில் செயல்படும் பூச்சிமருந்து கடையை வில்லாபுரத்தை சேர்ந்த நாக சங்கர்(51), சுப்பிரமணியன்(57) ஆகியோருக்கு அப்துல்ரசாக்(58) என்பவர் மூலம் வாடகைக்கு விட்டுள்ளது தெரியவந்தது.

அதை தொடர்ந்து போலீசார் 304(2), 338 ஆகிய பிரிவுகளின் கீழ் கட்டிட உரிமையாளர் முகமதுஇத்ரீஸ் மற்றும் பூச்சி கடை வைத்திருப்பவர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் அதை மீறி அங்கிருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com