நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,700 டன் மக்காச்சோளம் வந்தது

நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,700 டன் மக்காச்சோளம் வந்தது
Published on

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான கேழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் வாங்கி வரப்படுகிறது.

அந்த வகையில் நேற்று பீகார் மாநிலத்தில் இருந்து 2,700 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் வாங்கி வரப்பட்டது. இந்த மூட்டைகள் 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு கோழி தீவன ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com