39 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
39 பேருக்கு கொரோனா
Published on

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 38 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் 17 பேர், கொங்கணாபுரம், மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி பகுதிகளில் தலா 2 பேர், வீரபாண்டியில் 3 பேர், எடப்பாடியில் 4 பேர் உள்பட மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com