

சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரத்து 238 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று மேலும் 5 ஆயிரத்து 752 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இன்று சுமார் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 102 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,869 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் பேர் 7,050 உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.