"கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

"கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
"கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

சென்னை,

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எ.பி.வேலுமணி கூறியதாவது:-

முதலமைச்சர் அறிவுறித்தியபடி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவி பாதுகாப்புடன் இருப்பதே சிறந்த வழியாகும்.

எனவேதான் முதலமைச்சர் பொதுமக்களிடையே இந்நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பிலும் துண்டுப்பிரசுரங்கள், வீடியோ குறும்படங்கள், வானொலிகள் மற்றும் எல்இடி திரை வீடியோ வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதை போல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . குறிப்பாக சென்னையில் இது போன்ற விழிப்புணர்வு திட்டங்கள் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் (பொ) ஜெ.யு.சந்திரகலா, நகராட்சி நிர்வாக இணை ஆணையாளர் கலைச்செல்வி மோகன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com