

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 688 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தது. இவற்றில் சென்னையில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 7,672 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை தவிர்த்து செங்கல்பட்டில் 22 பேருக்கும், நெல்லையில் 20 பேருக்கும் என அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையம் வழியே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்களில் 36 பேர் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோன்று தமிழகத்தில் ஒரே நாளில் 10,333 மாதிரிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.