கோவையில் 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கோவையில் 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவையில் 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

கோவை,

கொரோனா எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கும், வாகனங்களில் சுற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பு, வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் போத்தனூரை சேர்ந்த 2 பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண் காவலருக்கு என 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com