சென்னையில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா உறுதி; சிவப்பு மண்டலத்திற்கு மாறுகிறது

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா உறுதி; சிவப்பு மண்டலத்திற்கு மாறுகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பணியில் அரசு தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது. இதில், சென்னையில் அதிக அளவாக 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முடிவானது.

இதுவரை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 40க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் 8 பேருடன் ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர், தற்போது சிவப்பு மண்டலமாக மாறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com