அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவை கவர்னர் உரையுடன் நாளை கூடுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் நாளை உரையாற்றுகிறார்.

சட்டப்பேரவை கூட உள்ளதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதன்படி, எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது அறந்தாங்கி எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com