தமிழகத்தில் ஆயிரத்து 800-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,484 இல் இருந்து 1,827 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆயிரத்து 800-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..!
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று 25 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,827 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,484 இல் இருந்து 1,827 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,73,116 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 632 இல் இருந்து 771 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,970 லிருந்து 10,033ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 764 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com